தோல்வியின் முகமே எங்கள் அக்காவே… வருக
தோல்வியின் முகமே எங்கள் அக்காவே… வருக
தோல்வியின் முகமே எங்கள் அக்காவே… வருக
ADDED : ஜூலை 05, 2025 03:31 AM
முன்னாள் கவர்னர் தமிழிசையின் கவிதையில் மக்கள் ஏமாறாமல் உள்ளனர். அதனால் தான், அவர் சந்தித்த தேர்தலில் மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். தமிழிசைக்கு புதிய கவிதையை கூறுகிறேன். ''தோல்வியின் முகமே, தமிழிசையே, எங்கள் அக்காவே வருக!'' பா.ஜ.,வில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை ஆகியோரிடையே நாற்காலி போட்டி கடுமையாக இருக்கிறது. இதில், தானும் செல்வாக்கு பெற்றவர் என்பதை காட்டுவதற்காக, தமிழிசை பேசி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம் - -ஒழுங்கு சரியாக இருப்பதால் தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்கிறார். இது சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி. சாத்தான்களின் ஆட்சி அல்ல.
-சேகர்பாபு,
அமைச்சர், தி.மு.க.,