Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு அனுமதி; விலை கிலோ ரூ.48.86

6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு அனுமதி; விலை கிலோ ரூ.48.86

6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு அனுமதி; விலை கிலோ ரூ.48.86

6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு அனுமதி; விலை கிலோ ரூ.48.86

ADDED : செப் 23, 2025 06:51 AM


Google News
சென்னை; தமிழக விவசாயிகளிடம் இருந்து, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 48.86 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், கேழ்வரகு வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.

மத்திய அரசும், ராணுவ வீரர்களுக்கான உணவில் சிறுதானிய உணவு வகைகளை கட்டாயமாக்கி உள்ளது. எனவே, தமிழக விவசாயிகளிடம் இருந்து, இம்மாதம் முதல் 2026 மார்ச் வரை, 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் அனுமதி அளித்துள்ளது.

கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு, 48.86 ரூபாய் என, 100 கிலோ எடை உடைய குவின்டாலுக்கு, 4,886 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கடந்த சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி, 2024 நவம்பரில் துவங்கிய அந்த சீசன், இந்தாண்டு ஜனவரியில் முடிவடைந்தது. பின், ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. அந்த சீசனில், 3,800 டன் தான் கொள்முதல் செய்யப்பட்டது. கிலோவுக்கு, 42.90 ரூபாய் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us