மத்திய நிதியமைச்சருடன் ஜவுளித் துறையினர் சந்திப்பு
மத்திய நிதியமைச்சருடன் ஜவுளித் துறையினர் சந்திப்பு
மத்திய நிதியமைச்சருடன் ஜவுளித் துறையினர் சந்திப்பு
ADDED : செப் 02, 2025 09:42 PM

கோவை; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, ஜவுளித் துறையினர் சென்னையில் சந்தித்து, அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடினர்.
இதுதொடர்பாக, சைமா தலைவர் சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஜவுளித்தொழில் அமைப்புகள் சார்பில் சந்தித்தோம். பா.ஜ. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உடனிருந்தார். அமெரிக்க வரிவிதிப்பால் ஜவுளித் துறைக்கு ஏற்பட்டுள்ள எதிர்பாராத சவால்கள் குறித்து கலந்துரையாடினோம். உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும் விதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி.எஸ்.டி. சீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது என, நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தலைகீழ் வரி கட்டமைப்பு பிரச்னையால், நுகர்வோர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இக்கட்டான இச்சூழலில், அசலைத் திரும்பச் செலுத்துவதற்கு 2 ஆண்டு அவகாசம், அடமானமில்லா கடனை 30 சதவீதம் அதிகரித்தல், 5 சதவீத வட்டியில், இ.சி.எல்.ஜி.எஸ். திட்டத்தில் கடன், ஆர்.ஓ.டி.டி.இ.பி. மற்றும் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்.திட்டங்களை மேலும் நீட்டித்து அறிவித்தல் போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள், ஜி.எஸ்.டி. பருத்தி செயல்பாட்டு முதலீடு உள்ளிட்டவை சார்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.