ஜி.எஸ்.டி., குறைப்பு: ஜவுளி, ஆடை தொழில் புதிய சிகரம் தொடும்
ஜி.எஸ்.டி., குறைப்பு: ஜவுளி, ஆடை தொழில் புதிய சிகரம் தொடும்
ஜி.எஸ்.டி., குறைப்பு: ஜவுளி, ஆடை தொழில் புதிய சிகரம் தொடும்

போட்டித்திறன் வலுப்படும்
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ. பி.சி.,) துணை தலைவர் சக்திவேல்: ஏ.இ.பி.சி., மற்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும்.
ஏற்றுமதி ஆர்டர் ஈர்க்கலாம்
சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: செயற்கை நுாலிழை, துணி ஆகியவற்றின் மீது 12 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி என்பது வளர்ச்சி பெற சிரமமாக இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பரவலாக அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கூடுதல் ஏற்றுமதி ஆர்டர்களை ஈர்க்கவும் இது துணையாக இருக்கும்.
மத்திய அரசின் தீபாவளி போனஸ்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்: ஜவுளித்துறை சார்ந்த அனைத்து ஜி.எஸ்.டி.,யிலும் மாற்றம் செய்ததற்காக, மத்திய அரசை பாராட்டுகிறோம்.
தொழில்துறைக்கு விடிவு காலம்
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்: பருத்தி பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை இழைக்கு பலரும் மாற வாய்ப்பு உள்ளது. ஏழு நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., திரும்பப் பெறலாம் என்ற அறிவிப்பு தொழில்துறையினருக்கு பயனளிக்கும். ஒவ்வொரு முறையும் நாங்கள் வங்கியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏற்கனவே வைத்த கோரிக்கையின்படி, இறக்குமதி வரிக்கு சரியான தீர்வு கிடைத்துள்ளது. முக்கியமாக, காடா துணி பைகளுக்கு, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.