'டாட்டா' சொல்கிறது வடகிழக்கு பருவமழை இனி பனியும், இளம்வெயிலும்
'டாட்டா' சொல்கிறது வடகிழக்கு பருவமழை இனி பனியும், இளம்வெயிலும்
'டாட்டா' சொல்கிறது வடகிழக்கு பருவமழை இனி பனியும், இளம்வெயிலும்
ADDED : ஜன 10, 2024 11:18 PM
சென்னை:வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது. இனி வரும் நாட்களில், இரவு மற்றும் காலையில் பனியும், பகலில் வெயிலும் நிலவும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில், நான்கு புயல்கள் உருவாகின. அக்டோபரில், அரபிக் கடலில், 'தேஜ்' புயல் உருவாகி, ஏமன் நாடுக்கு சென்றது. வங்கக்கடலில், 'ஹாமூன், மிதிலி' என்ற புயல்கள் உருவாகி, வங்க தேசத்தில் கரை கடந்தன.
'மிக்ஜாம்' புயல் உருவாகி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை, லேசாக வருடியதில், அதிகனமழை பெய்தது; ெவள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மற்றொரு வளிமண்டல சுழற்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. வரும் நாட்களில், இரவிலும், அதிகாலையிலும், பனிமூட்டம் காணப்படும். பகலில் மிதமான வெயில் நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், அக்., 1 முதல் டிச.,31 வரையிலான காலத்தில், வடகிழக்கு பருவமழை, 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 4 சதவீதம் கூடுதலாக, 46 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில், 2022ம் ஆண்டில் சராசரியாக, 92 செ.மீ., பெய்தது. அதை விட, 18 சதவீதம் கூடுதலாக, 2023ல், 109 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில், ஜன.,1 முதல் நேற்று வரை சராசரியாக, 5 செ.மீ., பெய்துள்ளது. சென்னையில் சராசரியாக, 1 செ.மீ., பெய்துள்ளது.