Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

ADDED : ஜூன் 20, 2025 11:28 AM


Google News
Latest Tamil News
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மே, 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்களில், 'அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த, 'ஹார்ட் டிஸ்க்' உள்ளிட்ட பொருட்களை திருப்பி வழங்க வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அலுவலகம், வீடுகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு, விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் இருவரிடமும், எதன் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற விபரங்களை, அமலாக்கத்துறை சார்பில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'எங்கள் முன் தாக்கல் செய்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை' என தெரிவித்து, முறைகேட்டில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். மேலும் வீட்டை, 'சீல்' வைக்க, எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆகாஷ் பாஸ்கரன், விகரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்றும், இருவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us