கடலுார் சிப்காட்டில் டேங்க் வெடித்து கழிவுநீர் வெளியேறிய தொழிற்சாலை செயல்பட தடை தமிழ்நாடு உறுதிமொழிக்குழு அதிரடி உத்தரவு
கடலுார் சிப்காட்டில் டேங்க் வெடித்து கழிவுநீர் வெளியேறிய தொழிற்சாலை செயல்பட தடை தமிழ்நாடு உறுதிமொழிக்குழு அதிரடி உத்தரவு
கடலுார் சிப்காட்டில் டேங்க் வெடித்து கழிவுநீர் வெளியேறிய தொழிற்சாலை செயல்பட தடை தமிழ்நாடு உறுதிமொழிக்குழு அதிரடி உத்தரவு
ADDED : மே 22, 2025 03:53 AM

கடலுார்: கடலுார் சிப்காட்டில் டேங்க் வெடித்து பாதிப்பை ஏற்படுத்திய தொழிற்சாலை செயல்பட, தமிழ்நாடு உறுதிமொழிக்குழு தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையில், உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்
கடலுாரில் ஆய்வுக்குபின் வேல்முருகன் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 49.10 கோடியில் 24 உதவி ஆய்வாளர் மற்றும் 155 காவலர்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் சிப்காட்டில் உள்ள லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் நிறுவனம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நாளொன்றுக்கு 618 கே.எல்.டி., தண்ணீரை சுத்திகரித்து, கழிவுநீரை வெளியேற்றுகிறது.
இந்நிறுவனத்தில் 15ம் தேதி கழிவுநீர் தொட்டி உடைந்து, கழிவுநீர் வெளியேறி அருகிலிருந்த கிராமத்தின் வீடுகளில் உட்புகுந்தது.
இதனைத் தொடர்ந்து இந்நிறுவனமானது தற்போது இயக்கத்தில் இல்லை. கலெக்டர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சிப்காட் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து விபத்துக் குறித்தும், நிறுவனத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு இக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அறிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில், இந்நிறுவனம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
விருத்தாசலத்தில் மருத்துவமனையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
ஆய்வின்போது, எஸ்.பி., ஜெயக்குமார் அரசு இணைச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.