'சுகாதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி'
'சுகாதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி'
'சுகாதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி'
ADDED : மே 22, 2025 01:22 AM
சென்னை:நோய்களை கட்டுப்படுத்துவதில், இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது என, சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த மனநல சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன், 'நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
தன்னம்பிக்கை எத்தகைய பலம் வாய்ந்தது என்பதற்கு இலக்கணமாக, மயிரிழையில் உயிர் தப்பி, இனி முன்பு போல இயங்க முடியாது என்ற நிலையிலிருந்து, மன உறுதி, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சி காரணமாக, மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனைகள் புரிந்து, பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.
தினசரி நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி வாயிலாக, உடல், மனநலம் காக்கப்படுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல் வாய்ப்பாக இப்பயணம் அமைந்துள்ளது.
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக, இந்தியா அளவில் திகழ்கிறது.
மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், ஐ.நா., விருதையும் பெற்றுள்ளோம்.
பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் திட்டம் போன்ற திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.