தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு தலைவர் நியமனம்
தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு தலைவர் நியமனம்
தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு தலைவர் நியமனம்
ADDED : ஜன 03, 2024 08:09 AM
சென்னை: தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த ஆண்டு அ.தி.மு.க.,வில் இணைந்தார். அந்த பொறுப்புக்கு புதிய நிர்வாகி நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், 'சமூக ஊடக பிரிவு மாநில துணை தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி, அந்த பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்படுகிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ஜ., மாநில கூட்டுறவு பிரிவு மாநில தலைவராக இருந்த, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மீண்டும் அக்கட்சியில் இணைந்து விட்டார். எனவே, பா.ஜ., மாநில கூட்டுறவு தலைவராக, முன்னாள் எம்.எல்.ஏ., வெங்காடசலம் நியமிக்கப்படுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.