Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கண் துடைப்பாக துவக்கினரா நில அளவை பயிற்சி மையங்களை; தகுதியான அலுவலர்களை நியமிக்க எதிர்பார்ப்பு

கண் துடைப்பாக துவக்கினரா நில அளவை பயிற்சி மையங்களை; தகுதியான அலுவலர்களை நியமிக்க எதிர்பார்ப்பு

கண் துடைப்பாக துவக்கினரா நில அளவை பயிற்சி மையங்களை; தகுதியான அலுவலர்களை நியமிக்க எதிர்பார்ப்பு

கண் துடைப்பாக துவக்கினரா நில அளவை பயிற்சி மையங்களை; தகுதியான அலுவலர்களை நியமிக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 20, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
மதுரை: வருவாய்த் துறையோடு இணைந்தே நிலஅளவைத் துறையும் இயங்குகிறது. இத்துறையில் நிலம் தொடர்பான சர்வே பணிகள் நடக்கின்றன. மேடு, பள்ளம், மலை, நீர்நிலை என உள்ள நிலப்பகுதியை சர்வே செய்வது சவாலான பணி. எனவே இப்பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு பயிற்சி தேவை. இதற்கென தமிழக அளவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் மட்டுமே பயிற்சி மையம் உள்ளது.

நிலஅவைத் துறையில் புதிதாக பணியில் சேருவோர், நிலம் தொடர்புள்ள வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, விவசாயம் என பிறதுறைகளிலும் தேவைப்படுவோருக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வாகும் அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி தரப்படும். இப்பயிற்சி 2 மாதம் வகுப்பறையிலும், ஒரு மாதம் களத்திலுமாக 90 நாட்கள் நடைபெறும்.

பணி நியமனம் இல்லை


இதற்கென ஒரே ஒரு பயிற்சி மையம் உள்ள நிலையில், புதிதாக மதுரை, கோவை மண்டலங்களிலும் பயிற்சி மையம் துவக்க அரசு உத்தரவிட்டது. சமீபத்தில் மதுரை, கோவையில் புதிய மையங்களை நிலஅளவைத்துறை கூடுதல் இயக்குனர்கள் கண்ணபிரான், வெங்கடேசன் துவக்கி வைத்தனர். ஆனால் மையத்தில் பணியாற்ற அலுவலர்கள் யாரும் நியமிக்கவோ, அதற்கான ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை.

இம்மையத்தின் முதல்வராக ஒரு இணை இயக்குனர், துணை முதல்வராக ஒரு ஆய்வாளர், துணை இயக்குனர், 2 தலைமை வரைவாளர்கள், 2 சர்வேயர்கள், தொழில்நுட்ப அலுவலர் ஒருவர், கள உதவியாளர்கள் 5 பேர், அலுவலக ஊழியர்கள் 6 பேர் என 20 பேர் வரை தேவை.

தரமான பயிற்சி அவசியம்


அவர்களை நியமிக்காமல், உள்ளூர் அலுவலர்கள், ஊழியர்களை வைத்தே பயிற்சியை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயிற்சியின் தரம் கேள்விக்குறியாகிறது. உரிய தரத்தோடு மையம் செயல்பட வேண்டும்.

இப்பயிற்சி பெற்றால்தான் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு போன்ற பயன்களும் கிடைக்கும்.

அவ்வாறு இருக்க, ஏனோதானோவென்று கண்துடைப்பாக மையத்தை துவக்கியுள்ளதாக ஊழியர்கள் கருதுகின்றனர். எனவே தகுதியுள்ள அலுவலர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், ஊழியர்கள், உதவியாளர்களை உடனே நியமிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us