Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ துாத்துக்குடியில் திடீர் கனமழை மருத்துவமனையில் வெள்ளம்

துாத்துக்குடியில் திடீர் கனமழை மருத்துவமனையில் வெள்ளம்

துாத்துக்குடியில் திடீர் கனமழை மருத்துவமனையில் வெள்ளம்

துாத்துக்குடியில் திடீர் கனமழை மருத்துவமனையில் வெள்ளம்

ADDED : மார் 23, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் 6:00 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் ஆங்காங்கே தாழ்வாக உள்ள பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.

சாத்தான்குளம், துாத்துக்குடி, கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், திருச்செந்துார் பகுதிகளில் அதிக மழை பெய்தது.

துாத்துக்குடி தாமோதரன் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வீட்டின் கூரை திடீரென இடிந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

துாத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில், குழந்தைகள் வார்டு, ரத்த வங்கி, காய்ச்சல் பகுதி, மனநலப்பிரிவு, சமையலறை பகுதி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து, அப்பகுதி முழுதும் தெப்பக்குளம் போல் காட்சியளித்தது.

தென்பாகம் காவல் நிலைய வளாகத்தைச் சுற்றி தண்ணீர் குளம்போல் காணப்பட்டது. காவல் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த கோப்புகள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

இதேபோல, காமராஜ் காய்கனி மார்க்கெட் பகுதியிலும் தண்ணீர் அதிகளவு தேங்கி காணப்பட்டது.

திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருமளவு தேங்கியது. திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால், மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us