Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றம்: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றம்: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றம்: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றம்: பதில் கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : ஜன 30, 2024 10:46 PM


Google News
மதுரை : சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் ஈடுபட்ட மத்திய தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை வழக்கறிஞர் கனிமொழிமதி 2016 ல் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழடியில் ஆற்றங்கரை நாகரீகம் குறித்து தொல்லியல்துறையின் அகழாய்வு நடக்கிறது. இது 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. அகழாய்வில் பழங்கால பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் சேகரித்தனர்.

அவற்றை பெங்களூருவிலுள்ள மியூசியத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் மியூசியம் அமைத்து அகழாய்வு பொருட்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு: அகழாய்வு முடிந்து கீழடியில் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பு: அகழாய்வு பணி கண்காணிப்பாளராக இருந்த மத்திய தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை மீண்டும் கீழடியில் நியமித்து அகழாய்வை தொடர உத்தரவிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்து மத்திய அரசு தரப்பில் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us