அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்கிறார் ஸ்டாலின்: அண்ணாமலை
அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்கிறார் ஸ்டாலின்: அண்ணாமலை
அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்கிறார் ஸ்டாலின்: அண்ணாமலை
ADDED : மார் 27, 2025 06:56 PM
சென்னை:'மக்களின் கவனத்தை திசை திருப்பும், முதல்வர் ஸ்டாலின் முயற்சிகள் அம்பலமாகி விட்டன' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மொழியை வைத்து மக்களிடம் பிளவு ஏற்படுத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்வதாக, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என, தனக்குத் தானே வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர் முதல்வர் ஸ்டாலின். வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவர்; இப்படி ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர், எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை. பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகின்றனர்.
முதல்வரின் குடும்பம், மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளை கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால், மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இரு மொழி கொள்கையை திணிக்கிறது. இதை இப்போது நாடு அறிந்திருக்கிறது. நாட்டு மக்கள், முதல்வரை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கின்றனர். தனது கட்சிக்காரர்கள் அங்கும், இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம், முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.
மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசை திருப்ப, முதல்வர் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகி விட்டன. இதை முதல்வர் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது. அறியாமையின் பேரின்ப உலகில் வாழ, முதல்வரை நாங்கள் ஒரு நாளும் தொந்தரவு செய்ய மாட்டோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.