ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை
ADDED : ஆக 06, 2024 02:10 PM

மதுரை:நாளை (ஆகஸ்ட் 7)ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடி, டி-ஷர்ட் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சந்தனகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி உற்சவ திருவிழாவில் ஜாதி தலைவர்கள் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட், ரிப்பன், கொடி இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி அடையாளம் ஏதுமின்றி ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.