சவரன் தங்கம் விலை ரூ.83,000ஐ தாண்டியது
சவரன் தங்கம் விலை ரூ.83,000ஐ தாண்டியது
சவரன் தங்கம் விலை ரூ.83,000ஐ தாண்டியது
ADDED : செப் 23, 2025 05:40 AM

சென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, நேற்று 83,000 ரூபாயை தாண்டி, 83,440 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,290 ரூபாய்க்கும், சவரன், 82,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 145 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று காலை தங்கம் விலை, கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 82,880 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 148 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 10,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 83,000 ரூபாயை தாண்டி, 83,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 1,120 ரூபாய் அதிகரித்தது.