அ.தி.மு.க., ஆட்சியில் தென்பகுதிகள் புறக்கணிப்பு
அ.தி.மு.க., ஆட்சியில் தென்பகுதிகள் புறக்கணிப்பு
அ.தி.மு.க., ஆட்சியில் தென்பகுதிகள் புறக்கணிப்பு
ADDED : செப் 07, 2025 06:24 AM

தமிழகத்தில், இதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தன. தற்போது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலி முதல் திருச்சி வரை பாலம், மேம்பாலம், சாலைப்பணிகள் என நடக்கின்றன.
மதுரையில், பாலத்தால் பாதிக்கப்படுவதாக அமெரிக்கன் கல்லுாரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்ததால், நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, நில எடுப்புக்கு மட்டும் 164 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு பணி தொடர்கிறது. வரும் ஜன., 30க்குள் முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 150 கோடி ரூபாயில் உருவாகும் சிவகங்கை ரோடு - கோமதிபுரம் இணைப்பு மேம்பாலப்பணி, நவ., 30க்குள் முடிந்து, திறக்கப்படும். விரகனுார் முதல் சக்குடி வரை சுற்றுச்சாலை அமைக்க 55 கோடி ரூபாய் ஒதுக்கி, நில எடுப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு 190 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படும்.
- - வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,