Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தெற்கு ரயில்வேயில் முதல் 'அம்ரித் பாரத்' ரயில் ஈரோடு - சென்னை - பீஹாருக்கு இயக்க ஒப்புதல்

தெற்கு ரயில்வேயில் முதல் 'அம்ரித் பாரத்' ரயில் ஈரோடு - சென்னை - பீஹாருக்கு இயக்க ஒப்புதல்

தெற்கு ரயில்வேயில் முதல் 'அம்ரித் பாரத்' ரயில் ஈரோடு - சென்னை - பீஹாருக்கு இயக்க ஒப்புதல்

தெற்கு ரயில்வேயில் முதல் 'அம்ரித் பாரத்' ரயில் ஈரோடு - சென்னை - பீஹாருக்கு இயக்க ஒப்புதல்

ADDED : செப் 11, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
சென்னை:தெற்கு ரயில்வேயில், முதல் 'அம்ரித் பாரத்' ரயிலை, ஈரோடில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக, பீஹார் மாநிலம் ஜோக்பானிக்கு இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி வரும் 15ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து, 'அம்ரித் பாரத்' ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன.

வந்தே பாரத்துக்கு இணையான வேகம், பாதுகாப்பு கொண்ட, 'அம்ரித் பாரத்' ரயில். 'புஸ் புல்' எனும் புதிய தொழில்நுட் பத்தில் தயாரிக்கப்படுகிறது .

இந்த ரயிலின் இருபுறமும், இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால், வந்தே பாரத்துக்கு இணையாக, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.

ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கும் வகையில், 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட, 22 எல்.எச்.பி., பெட்டிகள் இருக்கும்.

'சிசிடிவி' கேமரா, பயணியர் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுநர் அறை உட்பட, பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

தற்போது, பீஹார் தர்பங்கா - உத்தர பிரதேசம், 'அயோத்தி - தாம்' வழியாக, ஆனந்த் விஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலம் மால்டா - பெங்களூரு இடையே இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயில், முதல் அம்ரித் பாரத் ரயிலை, ஈரோடில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக, பீஹார் மாநிலம் ஜோக்பானிக்கு இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி வரும் 15ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண மற்றும் நடுத்தர பயணியரை கவரும் வகையில், அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போல் வேகமாக செல்லும் திறன் உடையது. ஆனால், இந்த ரயிலில் 'ஏசி' வசதி இருக்காது.

ஈரோடில் இருந்து வாரந்தோறும் வியாழக் கிழமை காலை 7:00 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக பீஹார் மாநிலம் ஜோக்பானியில் இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 7:30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us