ராணுவ தென்பகுதி தளபதி பிராருக்கு 'பரம் விஷிஷ்ட் சேவா' விருது
ராணுவ தென்பகுதி தளபதி பிராருக்கு 'பரம் விஷிஷ்ட் சேவா' விருது
ராணுவ தென்பகுதி தளபதி பிராருக்கு 'பரம் விஷிஷ்ட் சேவா' விருது
ADDED : ஜூன் 05, 2025 11:49 PM

சென்னை:ராணுவத்தின் தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர்சிங் பிராருக்கு, 'பரம் விஷிஷ்ட் சேவா' விருது வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தின் உயர்நிலை விருதுகளில் ஒன்றாக, பரம் விஷிஷ்ட் சேவா விருது திகழ்கிறது. இவ்விருது முப்படைகளில் பணியாற்றும், உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ஜெனரல் போன்ற பதவிகளில் உள்ள, மூத்த அதிகாரிகளின் சேவை மற்றும் மிக உயர்ந்த நிலை சேவையை கணக்கில் வைத்து, இந்த விருது வழங்கப்படும்.
ராணுவத்தின் தெற்கு பகுதி தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர்சிங் பிரார் உள்ளார். இவர் தன், 39 ஆண்டு கால சேவையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல உயரிய பொறுப்புகளை ஏற்று, திறம்பட பணியாற்றி உள்ளார்.
அவரது சேவையை பாராட்டி, அவருக்கு நேற்று முன்தினம் மாலை, ஜனாதிபதி மாளிகையில் நடந்த பாதுகாப்பு சேவைகள் விருது வழங்கும் விழாவில், பரம் விஷிஷ்ட் சேவா விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி பாராட்டினார்.