ADDED : ஜன 31, 2024 01:01 AM
சென்னை:பதிவுத்துறையில் பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டடத்தை கள ஆய்வு செய்ய வேண்டும் என்று, பதிவான பத்திரத்தை தர தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
'கவனிப்பு' பெறும் நோக்கத்தில், சார் பதிவாளர்கள் இப்படி செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்டட கள பணி நிலவரம் தொடர்பாக, தினசரி ஆய்வு செய்ய, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை, மண்டல வாரியாக அனுப்ப, டி.ஐ.ஜி.,க்களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், கட்டட களப்பணி என்று காரணம் சொல்லி பத்திரங்களை வழங்க, சார் பதிவாளர்கள் தாமதிக்க முடியாது.