காட்சிப் பொருளான தெய்வத் திருமேனிகள்: பொன் மாணிக்கவேல் வேதனை
காட்சிப் பொருளான தெய்வத் திருமேனிகள்: பொன் மாணிக்கவேல் வேதனை
காட்சிப் பொருளான தெய்வத் திருமேனிகள்: பொன் மாணிக்கவேல் வேதனை

3.50 லட்சம் விக்ரகங்கள்
என் பணிக்காலத்தில், துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. நாடு முழுவதும் உள்ள 3.50 லட்சம் விக்ரகங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை, அரசு தரப்பில் இதுவரை செய்யவில்லை. தொல்லியல் துறையினரும் பழமையான வரலாற்று ஆதாரங்களை திரட்டி, பதிவு செய்வதில்லை.திருவெண்காடு கோயிலில் புதைந்து கிடந்த விக்ரகங்கள், 1925, 1951ம் ஆண்டுகளில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
35 தெய்வ திருமேனிகள்
சென்னை அருங்காட்சியகத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலையை காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். முன்னோர்கள் படையெடுப்பு கால கட்டங்களில் தெய்வங்களின் உலோக திருமேனிகளை மண்ணில் புதைத்து வைத்தனர். தமிழகம் உட்பட பல கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 35 தெய்வ திருமேனிகள், விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்டுக் கொண்டு வர அரசிடம் சக்தி இல்லை.