Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தனிப்பட்ட பிரச்னைகளுக்கு ஜாதி சாயம் பூசலாமா

தனிப்பட்ட பிரச்னைகளுக்கு ஜாதி சாயம் பூசலாமா

தனிப்பட்ட பிரச்னைகளுக்கு ஜாதி சாயம் பூசலாமா

தனிப்பட்ட பிரச்னைகளுக்கு ஜாதி சாயம் பூசலாமா

ADDED : செப் 03, 2025 02:54 AM


Google News



தமிழகத்தில், பொறுப்பு டி.ஜி.பி., உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் விதிமுறைகளுக்குட்பட்டே நடக்கிறது. உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் வகையில் தான், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசில் தான் அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதும் நடக்கிறது.
தனிப்பட்ட பிரச்னைகளால் திருநெல்வேலியில் நடக்கும் வன்முறைகளுக்கு, சிலர் ஜாதி சாயம் பூச முயல்கின்றனர். தவறு யார் செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் கிடைத்த முதலீடுகள் வாயிலாக, தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 14.71 லட்சத்திலிருந்து 17 லட்சமாக உயர்ந்துள்ளது. 33 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
-அப்பாவு தமிழக சபாநாயகர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us