Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நவராத்திரி ஏழாம் நாள்

நவராத்திரி ஏழாம் நாள்

நவராத்திரி ஏழாம் நாள்

நவராத்திரி ஏழாம் நாள்

ADDED : செப் 28, 2025 06:23 PM


Google News
Latest Tamil News
மதுரை மீனாட்சியம்மன் இன்று தபசுக்காட்சியில் காட்சி தருகிறாள்.

நாக அரசர்களான சங்கன் சிவபக்தனாகவும், பதுமன் திருமால் பக்தனாகவும் இருந்தனர். இருவருக்கும் இடையே சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என போட்டி எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.

சிவனும், திருமாலும் சமமானவர்கள் என்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என பார்வதி விரும்பினாள். இதற்காக ஊசிமுனையின் மீது ஒற்றைக்காலில் நின்று கடும்தவம் புரிந்தாள். அவளைக் காண தேவர்கள் எல்லாம் பசுக்களின் வடிவில் பூமிக்கு வந்தனர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் 'ஆவுடையம்மாள்' எனப்பட்டாள். பூமிக்கு வந்து விட்ட பார்வதியின் முகம் மதி (நிலா) போல பிரகாசித்தது. இதன் காரணமாக கோமதி எனப்பட்டாள். சிவனும், திருமாலும் இணைந்து சங்கர நாராயணராக காட்சியளிக்க காரணமாக இருந்தவள் பார்வதி. அவளின் தவக்கோலத்தை தரிசித்தால் ஞானம், வைராக்கியம் உண்டாகும்.

பாட வேண்டிய பாடல்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us