செந்தில்பாலாஜி காவல் 41வது முறையாக நீட்டிப்பு
செந்தில்பாலாஜி காவல் 41வது முறையாக நீட்டிப்பு
செந்தில்பாலாஜி காவல் 41வது முறையாக நீட்டிப்பு
ADDED : ஜூன் 25, 2024 03:40 PM

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட அவரின் காவலை ஜூலை1 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
மேலும், அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில்பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையும் ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.