பள்ளிகளுக்கான நாட்காட்டி வெளியீடு: 112 நாட்கள் விடுமுறை
பள்ளிகளுக்கான நாட்காட்டி வெளியீடு: 112 நாட்கள் விடுமுறை
பள்ளிகளுக்கான நாட்காட்டி வெளியீடு: 112 நாட்கள் விடுமுறை
ADDED : ஜூன் 14, 2025 06:30 AM
சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி நடக்கும் நாட்கள், விடுமுறை நாட்கள், தேர்வு நடக்கும் நாட்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை இடம் பெற்றுள்ளன.
கடந்த 2ல் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின. ஜூலை 16ல், முதல் இடைப்பருவத் தேர்வு துவங்குகிறது. செப்., 18 - 26 வரை காலாண்டு தேர்வு நடக்கும். மறுநாள் முதல், அக்., 3 வரை காலாண்டு விடுமுறை. நவ., 11 - 13 வரை இரண்டாம் இடைப்பருவத் தேர்வு.
டிச., 15 - 23 வரை அரையாண்டு தேர்வு. மறுநாள் முதல், ஜன., 4 வரை அரையாண்டு விடுமுறை. பிப்., 17 - 19 வரை, மூன்றாம் இடைப்பருவத் தேர்வு நடக்கும்.
ஏப்., 10 - 24 வரை முழு ஆண்டு தேர்வு. மறுநாள் முதல் கோடை விடுமுறை துவக்கம் என, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டில், சனி, ஞாயிறு சேர்த்து மொத்தம் 112 நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும்.