மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்
மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்
மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்
ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

சென்னை: 4 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4.9 ஹெக்டேர் அளவை தாண்டி 105 ஹெக்டேர் அளவுக்கு மணல் அள்ளியதாக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகள் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக டி.ஜ.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. சாட்டிலைட் புகைப்படம், டிரோன் காட்சிகள் மூலம் அறிக்கை தயாராக உள்ளது. என கடிதத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.