திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
ADDED : ஜூன் 03, 2025 04:30 PM

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாதம், உண்டியல் காணிக்கையாக ரூ.3.42 கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுகிறது. மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. இந்த பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கையாக ரூ. 3 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 824 கிடைத்தது.
தங்கம் -1,701 கிராமும்,
வெள்ளி 22,791 கிராமும்,
1,237 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.