ரூ.1,933 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
ரூ.1,933 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
ரூ.1,933 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
UPDATED : ஜன 06, 2024 01:45 AM
ADDED : ஜன 05, 2024 10:37 PM

சென்னை: மாநிலம் முழுதும் 1,933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட, புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருப்பத்துார், 182 கோடி; திருவள்ளூர், 4.04 கோடி; தஞ்சாவூர் மாவட்டத்தில், 91.13 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு மாவட்டங்களில், 9.15 லட்சம் பேர் பயன் பெறும் வகையில், 1,335 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரூ.204 கோடி
சென்னை மாநகராட்சி யின் பல்வேறு பகுதிகளில், குடிநீர் வாரியம் சார்பில், 204 கோடி ரூபாய் செலவில், குடிநீர் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட, 1,933 கோடி ரூபாய் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 68 பேருக்கு கருணை பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, காந்தி, ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன்.
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.