கூட்டுறவு நகை கடன் வாங்க ஆர்வம்; 17 லட்சம் பேருக்கு ரூ.170 கோடி
கூட்டுறவு நகை கடன் வாங்க ஆர்வம்; 17 லட்சம் பேருக்கு ரூ.170 கோடி
கூட்டுறவு நகை கடன் வாங்க ஆர்வம்; 17 லட்சம் பேருக்கு ரூ.170 கோடி

நகை கடன்
தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன்கள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2024 - 25ல், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகை கடன்கள் வழங்கப்பட்டன.
ஆர்வம்
'ரிசர்வ் வங்கி விதிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது; எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்தாலும், அதற்கு ஏற்ப நகை கடன் வழங்கப்படும்' என, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். அதனால், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களின் நகை கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் வங்கிகள், அடகு நிறுவனங்களை போல, கூட்டுறவு நிறுவனங்களில் அதிக வட்டி வசூலிப்பதில்லை. குறித்த காலத்திற்குள் வட்டி, அசல் செலுத்தவில்லை என்றாலும், உடனே நகைகளை ஏலம் விடுவதில்லை. வாடிக்கையாளர்களை பல முறை தொடர்பு கொண்டும் செலுத்தவில்லை எனில் தான் ஏலம் விடப்படுகிறது. இதனால், பலர் கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர். ரிசர்வ் வங்கி விதிகளால் ஏற்பட்ட குழப்பத்தால், தற்போது அதிகம் பேர் நகை கடன் வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.