சிங்கவால் குரங்கு பாதுகாப்புக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
சிங்கவால் குரங்கு பாதுகாப்புக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
சிங்கவால் குரங்கு பாதுகாப்புக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 12, 2025 12:00 AM
சென்னை:'தமிழகத்தில் சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்துக்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் பரவலாக காணப்படுகின்றன.
இவற்றின் எண்ணிக்கை குறித்து, சில ஆண்டுகளுக்கு முன், உள்ளூர் அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த விபரங்கள் அடிப்படையில், சிங்கவால் குரங்குகள் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
இதே போன்று, நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளில், கழுதைப்புலிகள் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையும், குறைந்து வருகிறது. முள்ளெலிகள் மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கை காரணமாக கொல்லப்படுகின்றன.
இந்நிலையில், சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி, முள்ளெலி, செந்துடுப்பு மீன் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு, ௧ கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.