ஆட்சியில் பங்கா? தேர்தலுக்கு பின் முடிவு
ஆட்சியில் பங்கா? தேர்தலுக்கு பின் முடிவு
ஆட்சியில் பங்கா? தேர்தலுக்கு பின் முடிவு
ADDED : செப் 15, 2025 01:19 AM

கடந்த 2006ல், தி.மு.க., அரசில் காங்கிரசுக்கு பங்கு கிடைப்பதை தவிர்த்து விட்டோம். வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து, தி.மு.க., கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கட்சிகள் கூட்டணியாகவும், தனியாகவும் இருப்பதால், வரும் தேர்தலில் ஓட்டுகள் சிதறும்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, தொண்டர்கள், ரசிகர்கள் என தானாக கூட்டம் சேர்ந்துள்ளது. இது, தேர்தலில் ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியதா என விஜய் கேட்கிறார். மத்திய, மாநில அரசுகள் எதுவாக இருந்தாலும் நிறை, குறை இருக்கத்தான் செய்யும். மகளிர் உரிமைத்தொகை இன்னும் பெரும் பாலானவர்களுக்கு சென்று சேரவில்லை.
- கார்த்தி,
காங்கிரஸ் எம்.பி.,