ஓய்வூதியர்கள் நல அமைப்பை சி.ஐ.டி.யு., கட்டுப்படுத்த முயற்சி ‛'ரெவா' பொதுச் செயலாளர் தேவராஜன் குற்றச்சாட்டு
ஓய்வூதியர்கள் நல அமைப்பை சி.ஐ.டி.யு., கட்டுப்படுத்த முயற்சி ‛'ரெவா' பொதுச் செயலாளர் தேவராஜன் குற்றச்சாட்டு
ஓய்வூதியர்கள் நல அமைப்பை சி.ஐ.டி.யு., கட்டுப்படுத்த முயற்சி ‛'ரெவா' பொதுச் செயலாளர் தேவராஜன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2025 07:53 AM

மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பை(ரெவா) சி.ஐ.டி.யு., கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என மாநில பொதுச் செயலாளர் தேவராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
'ரெவா' அமைப்பு2001 ல் தொடங்கப்பட்டது. இதில் போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறும் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இணையலாம்.ஆரம்ப காலத்தில் சி.ஐ.டி.யு.,வுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. இருந்தாலும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் உறுப்பினராக உள்ளனர். அதனால் எந்தவொரு அரசியல் அமைப்பின் கீழ் இயங்காமல் தனித்து இயங்கி வந்தது.
நாளுக்குநாள் அமைப்பின் வளர்ச்சி அதிகரித்து தற்போது மாநில அளவில் 51 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. சமீபகாலமாக சி.ஐ.டி.யு., அமைப்பின் ஆதிக்கம் அமைப்பிற்குள் அதிகரித்துள்ளது. சி.ஐ.டி.யு., பரிந்துரைக்கும் நபர்கள் மட்டும் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்கின்றனர்.
ஓய்வூதியர் நலனை காக்க உருவாக்கிய அமைப்பை ஒரு சங்கம் கட்டுப்படுத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாது.
இதை ஏற்காத மதுரை மண்டலத்தை சேர்ந்த 3500 உறுப்பினர்கள் தனியாக செயல்படுவோம் என அறிவித்துள்ளனர். தொடர்ந்து மற்ற மண்டலங்களும் அறிவிக்க திட்டமிட்டுள்ளன.
ரெவா அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 18 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதை நிரப்புவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
ரெவா அமைப்பு ஓய்வுபெற்றோர் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இதில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்பது ஸ்தாபன விதி என்றார்.