Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

ADDED : ஜூன் 01, 2025 03:02 PM


Google News
Latest Tamil News
சென்னை: ஓய்வு பெற்றவர்களை மறுசுழற்சி மூலம் பணியமர்த்தியது கண்டத்திற்குரியது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி-இன் தேர்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை என்றும் கூறி அவர்களுக்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றவர்களை மறுசுழற்சி செய்து பணியமர்த்தியிருப்போது கண்டனத்திற்குரியது. மேலும், இந்த முடிவை நியாயப்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்றவர்கள் தலைமைச் செயலகத்தால் பரிந்துரைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி.,அறிவித்துள்ளது.

முதல்வரின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் பொழுது, ஓய்வு பெற்றவர்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமர்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவோம் என்பது போன்ற பல அடுக்கடுக்கான பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இன்னும் அவற்றை நிறைவேற்றவில்லை.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற நியமனங்கள் இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி-யின் நடைமுறைகளை மீறுவதாகவும் உள்ளது. எனவே, இதுபோன்ற பணியமர்த்தும் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நிறுத்த வேண்டும் எனவும் தகுதி படைத்த பட்டதாரி இளைஞர்களை அத்தகைய பணிகளில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us