Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விற்பனை சான்றிதழ் பதிவுக்கு கட்டணம் குறைப்பு

விற்பனை சான்றிதழ் பதிவுக்கு கட்டணம் குறைப்பு

விற்பனை சான்றிதழ் பதிவுக்கு கட்டணம் குறைப்பு

விற்பனை சான்றிதழ் பதிவுக்கு கட்டணம் குறைப்பு

ADDED : ஜூன் 17, 2025 11:38 PM


Google News
சென்னை:சொத்து விற்பனை கிரைய பத்திரங்கள் போன்று, விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணம், 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேரடியாக உரிமையாளரிடம் இருந்து சொத்து வாங்கும்போது, அதற்கு விற்பனைக்கான கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு சொத்தின் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் வங்கி உத்தரவு, கடன் வசூல் தீர்ப்பாயம், ஏலம் வாயிலாக கைமாறும் சொத்துக்களுக்கு, விற்பனை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். இந்த சான்றிதழை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு பதிவு செய்யும்போது, அதற்கு பதிவு கட்டணம், 4 சதவீதம் வசூலிக்கப்பட்டது. அதை, 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, பதிவுத்துறை அனுப்பிய பரிந்துரைக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, விற்பனை சான்றிதழ்களுக்கான பதிவு கட்டணம், 4 சதவீத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பதிவுத்துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us