தேர்தலை புறக்கணிக்க தயார்: திருமா ஆவேசம் திருமா ஆவேசம்
தேர்தலை புறக்கணிக்க தயார்: திருமா ஆவேசம் திருமா ஆவேசம்
தேர்தலை புறக்கணிக்க தயார்: திருமா ஆவேசம் திருமா ஆவேசம்
ADDED : பிப் 24, 2024 12:11 AM
சென்னை:''லோக்சபா தேர்தலை புறக்கணிக்கக்கூட தயாராக இருக்கிறோம்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.
ஓட்டுப்பதிவில், 100 சதவீத ஒப்புகைச் சீட்டை பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது:
சனாதன சக்திகளின் அரசியலை அழிக்க, நெருப்பை பற்ற வைக்கிறோம். ஜனவரி மாதத்தில், இ.வி.எம்., இயந்திரத்தை முற்றாக நீக்கி, ஓட்டுச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றோம்.
இந்த முறை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டு பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். 'இண்டியா' கூட்டணியின் தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு.
கடந்த லோக்சபா தேர்தலில் 393 இடங்களில் இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், எண்ணப்படும் ஓட்டுகளுக்கும் வேறுபாடு இருந்தது.
மேலும், 220 தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை விட எண்ணப்பட்ட ஓட்டுகள் அதிகமாக வந்துள்ளது. மீதித் தொகுதிகளில் குறைவாக வந்துள்ளது. இது மோசடியை காட்டும் வகையில்உள்ளது.
நிபுணர்கள் இந்த மோசடியை கண்டறிந்துள்ளனர். இது இயந்திர ஓட்டுப்பதிவல்ல. மோடியின் ஓட்டுப்பதிவு இயந்திரம் என, ராகுல் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் தேசிய கட்சியல்ல. ஆனால், தேசிய கட்சிகள் பதறாத பிரச்னைகளிலும் நாம் போராடுகிறோம்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற சவால், என் முன்னே உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக்கூட தயாராக இருக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கே பா.ஜ., வேட்டு வைத்துள்ளது. மீண்டும் பா.ஜ., வந்தால் அதிபர் ஆட்சி முறை தான் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.