வீடுகளுக்கு ரேஷன் திண்டுக்கல் நாகையில் துவக்கம்
வீடுகளுக்கு ரேஷன் திண்டுக்கல் நாகையில் துவக்கம்
வீடுகளுக்கு ரேஷன் திண்டுக்கல் நாகையில் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 12:53 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டம் சோதனை முயற்சியாக, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில், நேற்று முதல் வரும், 5ம் தேதி வரை துவக்கப்படுகிறது.
அதன்படி, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று தலா, 10 ரேஷன் கடைகளுக்கு உட்பட, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் வேனில் எடுத்துச் சென்று வினியோகம் செய்யப்பட்டன. இன்று சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில், சோதனை ரீதியாக வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒருவரின் வீட்டிற்கு ரேஷன் பொருட்களை எடுத்து செல்ல எவ்வளவு நேரமாகிறது; எவ்வளவு செலவாகிறது என்ற விபரம், சோதனை முயற்சியின் போது சேகரிக்கப்படுகிறது' என்றார்.