ராமநாதபுரம், பெரம்பலுார் மாநகராட்சியாக மாறுது
ராமநாதபுரம், பெரம்பலுார் மாநகராட்சியாக மாறுது
ராமநாதபுரம், பெரம்பலுார் மாநகராட்சியாக மாறுது
ADDED : மார் 26, 2025 12:41 AM
சட்டசபையில் அமைச்சர் நேரு பேசியதாவது:
நகர்ப்புறங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நகராட்சிகள் எண்ணிக்கை, 137ல் இருந்து, 146 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பேரூராட்சிகளும் 487ல் இருந்து, 491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மன்னர்களின் தலைநகராக விளங்கிய ராமநாதபுரம், அபரிமிதமான தொழில் வளர்ச்சி கொண்டுள்ள பெரம்பலுார் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து, முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.