ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்திப்பு
ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்திப்பு
ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்திப்பு

சென்னை: அன்புமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் 2வது முறையாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரிடையே சமாதானத்தை ஏற்படுத்த அவர்களின் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, கடந்த 5ம் தேதி தைலாபுரம் இல்லத்திற்கு சென்று, ராமதாஸை சந்தித்து பேசினார் அன்புமணி. இந்த சந்திப்பின் போது, ஆடிட்டர் குருமூர்த்தியும் ராமதாஸூடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள ராமதாஸ் மீண்டும் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை சந்தித்து பேசியுள்ளார். தியாகராய நகரில் உள்ள ஏ.கே.மூர்த்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், 'ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு பற்றி தைலாபுரத்தில் விளக்கம் அளிக்கிறேன். மதுரை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போவதில்லை,' என்று கூறினார்.