Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

UPDATED : மே 19, 2025 08:09 AMADDED : மே 19, 2025 08:01 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 120 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்துள்ளது. தற்போதும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

நாமக்கல் மாவட்டம்

ராசிபுரம் 120

நாமக்கல் 118

புதுச்சத்திரம் 82

எருமப்பட்டி 60

சேந்தமங்கலம் 51

கலெக்டர் ஆபீஸ் 39.2

குமாரபாளையம் 34.2

மோகனூர் 29

கிருஷ்ணகிரி மாவட்டம்

கெலவரப்பள்ளி அணை 90

ஓசூர் 48

பாம்பார் அணை 42

கிருஷ்ணகிரி 40.2

பரூர் 35.6

கேஆர்பி அணை 32.8

ஜம்பு குட்டப்பட்டி 32

ஊத்தங்கரை 31.4

தென்கணிக்கோட்டை 22

ராயக்கோட்டை 17

தர்மபுரி மாவட்டம்

பென்னாகரம் 62

பாப்பிரெட்டிப்பட்டி 48

அரூர் 39

தர்மபுரி 35

மாரண்டஹள்ளி 29

சேலம் மாவட்டம்

மேட்டூர் 100.6

ஆனை மடுவு அணை 58

தம்மம்பட்டி 55

ஆத்தூர் 46

கரிய கோவில் அணை 40

சேலம் 39.4

எடப்பாடி 30.6

ஏற்காடு 30

கெங்கவல்லி 29

வீரகனூர் 29

தலைவாசல் 27

டேனிஸ்பேட்டை 23

ஏத்தாப்பூர் 20

ஓமலூர் 18

ஈரோடு மாவட்டம்

சத்தியமங்கலம் 48

அம்மாபேட்டை 45

வரட்டு பள்ளம் 39.8

பெருந்துறை 35

பவானி 24.8

ஈரோடு 23.6

கவுந்தப்பாடி 22.2

மொடக்குறிச்சி 20

குண்டேரி பள்ளம் 19.8

கொடிவேரி 18

கோபிசெட்டிபாளையம் 9.2

நீலகிரி மாவட்டம்

கோடநாடு 39

ஊட்டி 26.1

பார்வுட் 15

குந்தா 15

வென்ட்ஒர்த் 15

கிண்ணக்கொரை 13

பில்லிமலை எஸ்டேட் 10

அரியலூர் மாவட்டம்

சுத்தமல்லி அணை 104

திருமானூர் 102.2

குருவடி 86.5

ஜெயங்கொண்டம் 77

செந்துறை 45.2

அரியலூர் 27.2

ஆண்டிமடம் 21.4

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு 69.6

மதுராந்தகம் 49.2

திருக்கழுக்குன்றம் 37.2

திருப்போரூர் 18.4

சென்னை

ஈஞ்சம்பாக்கம் 52.5

கள்ளக்குறிச்சி மாவட்டம்

ரிஷிவந்தியம் 142

கலயநல்லூர் 126

தியாகதுருகம் 116

மணலூர்பேட்டை 110

சூளாங்குறிச்சி 105

விருகவூர் 90

மணிமுத்தாறு அணை 88

மானாம்பூண்டி 86

ராமநாதபுரம் மாவட்டம்

ராமேஸ்வரம் 113.7

தங்கச்சிமடம் 74.2

மண்டபம் 72.6

பாம்பன் 64.1

சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி 43

திருப்பத்தூர் 20.6

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி 52

வலங்கைமான் 41

முத்துப்பேட்டை 26.2

நீடாமங்கலம் 20.6

திருப்பத்தூர் மாவட்டம்

ஆம்பூர் 46

வட புதுப்பட்டு 38

வாணியம்பாடி 21

நாட்றம்பள்ளி 17

திருப்பத்தூர் 11.2

திருவண்ணாமலை

ஆரணி 41

செங்கம் 35.8

தண்டராம்பட்டு 34.6

போளூர் 30.4

கீழ்பெண்ணாத்தூர் 30

திருவண்ணாமலை 24

வந்தவாசி 16

விழுப்புரம் மாவட்டம்

முகையூர் 70

செம்மேடு 38.4

அவலூர்பேட்டை 37

விழுப்புரம் 36

திருவெண்ணைநல்லூர் 25

கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us