Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ரயில் நிலையம் அருகே காலியிடம்; வாடகைக்கு விடுகிறது ரயில்வே

ரயில் நிலையம் அருகே காலியிடம்; வாடகைக்கு விடுகிறது ரயில்வே

ரயில் நிலையம் அருகே காலியிடம்; வாடகைக்கு விடுகிறது ரயில்வே

ரயில் நிலையம் அருகே காலியிடம்; வாடகைக்கு விடுகிறது ரயில்வே

ADDED : மார் 18, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
சென்னை : தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களில், தனியார் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் மட்டும், 60 ஆயிரம் ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் அருகே காலியாக உள்ள இந்த இடங்களை, வாடகைக்கு விட்டு வருவாய் பார்க்க, ரயில்வே திட்டமிட்டு உள்ளது.

இங்கு நிகழ்ச்சிகள் நடத்த, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம், பிறந்த நாள், குடும்ப விழாகள், பயிற்சி வகுப்புகள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தலாம்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட கோட்டங்களில், 150க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் அருகே காலியிடங்கள் உள்ளன.

பொது மக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் தங்களது நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்த, அந்தந்த ரயில் கோட்ட தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை கோட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், வண்டலுார், பொத்தேரி, சிங்கப்பெருமாள்கோவில், காஞ்சிபுரம், அரக்கோணம், ஜோலார்பேட்டை, கூடுவாஞ்சேரி உட்பட, 18 ரயில் நிலையங்கள் அருகே காலியாக உள்ள இடங்களை, வாடகைக்கு விட தேர்வு செய்து உள்ளோம்.

காலி இடங்கள் மட்டுமே நாங்கள் அளிப்போம். வாடகைக்கு எடுப்போர், அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றார் போல, அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிலத்துக்கான வாடகை தொகை அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us