"பிள்ளை செய்த குற்றம்; பெற்றோருக்கு வந்த சோதனை": ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவல்
"பிள்ளை செய்த குற்றம்; பெற்றோருக்கு வந்த சோதனை": ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவல்
"பிள்ளை செய்த குற்றம்; பெற்றோருக்கு வந்த சோதனை": ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவல்
ADDED : ஜூன் 02, 2024 03:50 PM

மும்பை: 'குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, இரண்டு பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோரை வரும் ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த மே 19ம் தேதி, 'போர்ஷ்' என்ற விலையுயர்ந்த கார் சாலையில் தாறுமாறாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியாகினர். பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் அந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து வழக்கில் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்ற, அவருடைய குடும்பத்தினர் பல முயற்சிகளை செய்தது, போலீசை அதிர்ச்சி அடையச் செய்தது.
அந்தச் சிறுவன் குடி போதையில் இருந்ததை உறுதிப்படுத்த, அங்குள்ள மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சிறுவனின் ரத்தத்துக்கு பதிலாக கொடுக்கப்பட்ட ரத்த மாதிரி, சிறுவனின் தாயுடையது என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் அழிக்க முயன்ற சிறுவனின் பெற்றோரை வரும் ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.