Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ போலி ஆவணம் மூலம் ரூ.9.34 லட்சம்சொத்து பதிவு: போலீஸ் விசாரணை

போலி ஆவணம் மூலம் ரூ.9.34 லட்சம்சொத்து பதிவு: போலீஸ் விசாரணை

போலி ஆவணம் மூலம் ரூ.9.34 லட்சம்சொத்து பதிவு: போலீஸ் விசாரணை

போலி ஆவணம் மூலம் ரூ.9.34 லட்சம்சொத்து பதிவு: போலீஸ் விசாரணை

ADDED : ஜூன் 16, 2025 05:34 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலி ஆவணம் மூலம் ரூ.9.34 லட்சம் மதிப்புள்ள சொத்தை பத்திரப் பதிவு செய்தவர்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அ.புதுப்பட்டி அருகே கரையான்பட்டி கணேசன் 65. இவரது தந்தை நாராயணன் பெயரில் மானாமதுரை அருகே அன்னவாசலில் சொத்துகள் உள்ளன. நாராயணனுக்கு கணேசன், செல்வராஜ், தனம், மாரியம்மாள் ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

கணேசனின் தந்தை நாராயணன், தாயார் காளியம்மாள் இறந்து விட்டனர். கணேசன் தன் தாய் தந்தையருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மதுரை கோட்டாட்சியரிடம் மனு அளித்து 2024 செப்.,20 ல் உத்தரவு பெற்றார். அந்த உத்தரவை வைத்து இறப்பு சான்றிதழ் கோரி வாடிப்பட்டி தாசில்தாரிடம் மனு செய்தார். ஆனால் இறப்பு சான்று வழங்கவில்லை.

இந்நிலையில் கணேசனின் சகோதரன் செல்வராஜ், அவரது மகன் கார்த்திகேயன் மற்றும் சகோதரி தனம் ஆகியோர் தன் தந்தைக்கு மோசடியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து கணேசன் பெயரையும் மற்றொரு சகோதரி மாரியம்மாள் பெயரையும் விடுத்து நாராயணனுக்கு செல்வராஜ் மற்றும் தனம் ஆகிய இரண்டு நபர்கள் மட்டுமே வாரிசு என்பது போன்று போலியான ஒரு வாரிசு சான்றிதழை தயாரித்து, போலி இறப்பு சான்றிதழ் தயாரித்தனர். போலி சான்றிதழை வைத்து தந்தை நாராயணனின் பெயரில் அன்னவாசலில் இருக்கும் ரூ.9.34 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை செல்வராஜ், அவரது மகன் கார்த்திகேயன் மற்றும் தனம் ஆகியோர் பாகப்பிரிவினை செய்து மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் தனபாலன், சாட்சி கையெப்பம் இட்ட முருகேசன் மற்றும் நாகராஜன் இருந்துள்ளதாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கணேசன் புகார் அளித்தார்.

கார்த்திகேயன், தனம், மிளகனுார் முருகேசன், நாகராஜன், தனபாலன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us