தமிழகத்தில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிப்பு: பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
தமிழகத்தில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிப்பு: பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
தமிழகத்தில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிப்பு: பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
ADDED : ஜூலை 26, 2024 01:06 PM

சென்னை: தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்கப்படும் நிலையில், அங்கிருந்து ஐபேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன்களை தொடர்ந்து ஐ-பேட்களையும் இந்த ஆலையில் இருந்து தயாரிக்க பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது. மேலும், 2 ஆண்டுகளில் ஆலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள் நிறுவன இதர தயாரிப்புகளையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை என பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபேட்களை தயாரிக்கும் முடிவால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.