தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்
தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்
தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 05:36 AM

சென்னை : “கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இதன் காரணமாக, 25 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்து உள்ளன.
இவ்வாண்டு தமிழகம் முழுதும், 1.75 கோடி மாணவர்கள், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உள்ளனர். சில தனியார் பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை முடக்கி வைத்துள்ளனர்.
எனவே தமிழக அரசு, மாணவர்கள் நலன் கருதி நிலுவை நிதியை வழங்கி, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களும், அரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி, 25 சதவீத மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.