'தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் சஸ்பெண்ட்'
'தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் சஸ்பெண்ட்'
'தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் சஸ்பெண்ட்'
ADDED : பிப் 23, 2024 10:20 PM
சென்னை:அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டங் களில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சம்பந்தப்பட்ட தனியார் பஸ் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு எதிராக, கடுமை யான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்றும், அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், 'சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு விதிக்கப் படும் அபராதத்தை, 50,000 ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், முதல் பெஞ்ச், 'அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்பட்டு விடாது. தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, அடிக்கடி சோதனை நடத்த வேண்டும்.
'தொடர்ந்து குற்றம் புரிந்தால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதால், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.