ADDED : ஜன 01, 2024 06:16 AM

நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, ஆலமரத்துக்காட்டை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன், 23; கனரக வாகன ஓட்டுனர். இவரது மனைவி லட்சுமி, 22, நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.
ஹரிஹரன் கடந்த, 23ல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சுவரில் லட்சுமி தலையை ஹரிஹரன் மோதியதில் அவர் மயக்கமானார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். லட்சுமி, 'கோமா' நிலைக்கு சென்றார்.
ஹரிஹரன், 25ம் தேதி மருத்துவமனையிலேயே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், 29ம் தேதி லட்சுமி இறந்தார். ஆயில்பட்டி போலீசார், ஹரிஹரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.