Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வீட்டு வசதி வாரிய வீடுகளில் பூச்சு வேலைகள் மோசம் * கூடுதல் செலவு ஏற்படுவதாக வாங்குவோர் புகார்

வீட்டு வசதி வாரிய வீடுகளில் பூச்சு வேலைகள் மோசம் * கூடுதல் செலவு ஏற்படுவதாக வாங்குவோர் புகார்

வீட்டு வசதி வாரிய வீடுகளில் பூச்சு வேலைகள் மோசம் * கூடுதல் செலவு ஏற்படுவதாக வாங்குவோர் புகார்

வீட்டு வசதி வாரிய வீடுகளில் பூச்சு வேலைகள் மோசம் * கூடுதல் செலவு ஏற்படுவதாக வாங்குவோர் புகார்

ADDED : பிப் 10, 2024 07:59 PM


Google News
Latest Tamil News
வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில், பூச்சு வேலையின் தரம் மோசமாக இருப்பதால், வீடு வாங்குவோருக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. முன்னர் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்ட வீடுகள், தற்போது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகம் முழுதும் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், 3,000க்கு மேற்பட்ட வீடுகள் விற்காமல் உள்ளன. இந்த வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வாரிய அதிகாரிகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், பூச்சு வேலையில் தரக்குறைவு மற்றும் உட்புற வசதிகள் மாற்றத்துக்காக, 5 லட்சம் ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாரிய திட்டங்களில் கட்டுமான பணிகள் மூன்றாம் தரப்பு வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. பூச்சு வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சென்னையில் குறிப்பிட்ட சில திட்டங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கப்பட்டனர். குறைபாடுகளை சரி செய்யாத ஒப்பந்ததாரர்களுக்கு, பிணைய தொகையை திருப்பி தராமல் நிறுத்த உத்தரவிட்டுள்ளோம்.

வேறு எந்த திட்டத்திலும் இது போன்ற குறைபாடுகள் இருந்தால், வீடு ஒதுக்கீட்டாளர்கள் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'தரம் குறைந்த எம் - சாண்ட்


தான் பிரச்னைக்கு காரணம்' ஒரு காலத்தில் வீட்டுவசதி வாரிய கட்டடங்கள் என்றால், தரமானதாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. தற்போது, அதிக தளங்கள் உடைய அடுக்குமாடி குடியிருப்புகளை வீட்டு வசதி வாரியம் கட்டி வருகிறது. கட்டட அமைப்பியல் ரீதியாக உறுதியாக கட்டப்பட்டாலும், சுவர்கள் கட்டுமானத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, பூச்சு வேலையில் ஆற்று மணலுக்கு பதிலாக, குறைந்த விலையில் கிடைக்கும் தரமில்லாத, 'எம் - சாண்ட்' பயன்படுத்துவதால், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. புதிதாக கட்டிய வீட்டை வாங்கினாலும், பூச்சு வேலை குறைபாடுகளை சரி செய்ய, கூடுதல் செலவாகிறது. வீடுகளில் அலமாரி, சமையலறை மேடைகள் அமைப்பதில், மக்களின் விருப்பத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இதைச் சரி செய்யவும், மக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற விஷயங்களில், தரத்தை உறுதி செய்ய வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி. பாலமுருகன்,
கட்டட அமைப்பியல் பொறியாளர்



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us