ADDED : ஜன 12, 2024 11:37 PM
சென்னை:பொங்கலை முன்னிட்டு, 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வினியோகம், 10ம் தேதி துவங்கியது; நாளை வரை வாங்கலாம்; அவகாசம் அளிக்கப்படுமா என்பது சந்தேகமே.
நேற்று மாலை 6:00 மணி வரை, 1.72 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதில், பெரம்பலுார், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்சமாக, 85 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
மற்ற மாவட்டங்களில், 77 - 82 சதவீதம் என்றளவில் உள்ளது.