போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானம்; 7 பேருக்கு மறுவாழ்வு
போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானம்; 7 பேருக்கு மறுவாழ்வு
போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானம்; 7 பேருக்கு மறுவாழ்வு
ADDED : செப் 10, 2025 01:30 AM

மதுரை : நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பழநி பட்டாலியன் போலீஸ்காரர் முனியாண்டியின் 26, உடல் உறுப்புகள் தானம் செய்ததன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கும்மணந்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி 26. இவர் 2022ல் போலீஸ் பணியில் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழநி 14வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தவர், செப்.,7 இரவு டூவீலரில் சீலையம்பட்டி -- வேப்பம்பட்டி கிராம சாலையில் வந்தார். அப்போது நாய் குறுக்கே சென்றதால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்தார். வலிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அன்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை அவர் மூளைச்சாவு அடைந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை இறந்த நிலையில் அம்மா ஜெயராணியை பராமரித்து வந்தார். ஒரு சகோதரி உள்ளார். முனியாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். கல்லீரல் நெல்லை தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் மதுரை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. முனியாண்டி உ டலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.