சிறையில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சிறையில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
சிறையில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 01, 2024 06:15 AM
கோவை : கோவை மத்திய சிறையில் கைதிகள், கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒவ்வொரு அறையாக கைதிகளிடம் சோதனை செய்தனர்.
அதில், ஒரு அறையில் இருந்த தண்டனை கைதியான ஜெயராம், 23, என்பவரிடம், 8 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மற்றொரு தண்டனை கைதியான பார்த்தசாரதி, 31, ஒரு வாரத்திற்கு முன், ஜெயராமிடம் கொடுத்து மறைத்து வைக்கும்படி தெரிவித்ததாக கூறினார்.
பார்த்தசாரதியிடம் விசாரித்த போது, அவர் மத்திய சிறையின் முதல் நிலை தலைமை காவலர் ஜெயச்சந்திரன், கஞ்சாவை பதுக்கி வைக்க கூறியதாக தெரிவித்தார்.
சிறை நிர்வாகம் கைதிகளிடமும், போலீஸ்காரர் ஜெயச்சந்திரனிடமும் விசாரித்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்படி, மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமார், முதல் நிலை காவலர் ஜெயசந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.