பெருந்துறையில் ரவுடிகள் 5 பேரை சுட்டு பிடித்தனர் போலீசார்
பெருந்துறையில் ரவுடிகள் 5 பேரை சுட்டு பிடித்தனர் போலீசார்
பெருந்துறையில் ரவுடிகள் 5 பேரை சுட்டு பிடித்தனர் போலீசார்
ADDED : ஜன 05, 2024 10:29 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், 34. இவர் மீது பல கொலை, கொள்ளை, கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர், போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
சுற்றி வளைப்பு
களக்காடு அருகே மேலகாடுவெட்டியில் இசக்கிபாண்டி என்பவர் நவ., 22ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சிவசுப்பிரமணியன் தேடப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பதுங்கி இருப்பதாக திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனின் தனிப்படைக்கு தகவல் தெரிந்தது.
தனிப்படை எஸ்.ஐ., ஆன்டோ பிரதீப் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்த திருநெல்வேலி ரவுடி கும்பலை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அந்த கும்பல் போலீசாரை கண்டதும் அரிவாளால் வெட்ட முயற்சித்தனர்.
கும்பல் மீது எஸ்.ஜ., ஆன்டோ பிரதீப், துப்பாக்கி சூடு நடத்தினார். எனினும், அவர்கள் மீது குண்டு படாமல் சுவற்றில் பட்டதால் உயிர் தப்பி ஓடினர்.
விசாரணை
இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. பின், சிவசுப்பிரமணியன், அவரது கூட்டாளிகளான முத்து மணிகண்டன், சூர்யா, வசந்தகுமார், இசக்கி பாண்டி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதில் தப்பியோட முயன்ற சிவசுப்பிரமணியனுக்கும், முத்து மணிகண்டனுக்கும் காயம் ஏற்பட்டது.
இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களிடம் களக்காடு ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.